இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்காக பிக்கு உடைக்காக சிறைச்சென்றவர்களை காப்பாற்றும் நிதியம் ஏற்பாடு செய்துள்ள நிதிசேகரிப்பு பயணம் இன்று ஆரம்பமாகின்றது.கொழும்பு கோட்டை சம்புத்தாலோக விகாரையின் முன்னால் இருந்து இன்று காலை இந்த பயணம் ஆரம்பமாகவுள்ளதாக மெதகொட அஹயதிஸ்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல் நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இந்த நிதி சேகரிக்கும் பயணம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

