பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்திற்கு இரண்டு மாதங்களில் 4 மில்லியன் லாபம்

21415 166

பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு இரண்டு மாதகாலப்பகுதிக்குள் 4 மில்லியன் ரூபாய்களை லாபமாக பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கிய பெப்பர்ச்சுவல் நிறுவனத்தின் மேலாளர் கசுன் பலிசேன இந்தத் தகவலை வெளியிட்டார்.

முன்னதாக தமது நிறுவனத்துக்கு உயர்மட்டத்துடன் தொடர்புகள் இருந்ததாக பலிசேன குறிப்பிட்டபோது பெப்பர்ச்சுவல் நிறுவனத்தின் சட்டத்தரணி அவரை இடைமறிப்பு செய்தார்.

இதன்போது அதனை எதிர்த்த பிரதி மன்றாடியார் நாயகம் தப்புல த லிவேரா குறித்த சட்டத்தரணியை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்தார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஆணைக்குழுவின் விசாரணையாளர்களான நீதிபதிகள் மூன்றாம் தரப்பு தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டாம் என பிரதி மன்றாடியார் நாயகத்தை எச்சரித்தனர்.

இதேவேளை இந்த விசாரணைகளில் சாட்சியம் வழங்குவதற்காக எதிரவரும் திங்கட்கிழமை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் முன்னிலையாகவுள்ளார்.

 

 

 

 

 

 

Leave a comment