ஸ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கு பெருந்தோட்ட மாணவர்களை உள்வாங்க விசேட நடவடிக்கை – கல்வி இராஜாங்க அமைச்சர்

278 0

ஸ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கு பெருந்தோட்ட மாணவர்களை உள்வாங்கும் விதிமுறையினை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ண்ன் தெரிவித்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்கும்போதுஇ இந்திய வமசாவளி தமிழர்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்குவது என்பது தொடர்பாக ஆராயப்படுகின்றது.

ஒருசில பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் தொழில் செய்தாலும்இ அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஏனைய விடயங்கள் தொழில் தருநரால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இதன் காரணமாக அவர்களுடைய பிள்ளைகளிடம் ஊழியர் சேமலாப நிதி அல்லது வேறு சான்றிதழ்களை கேட்க முடியாதுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியை கல்வியல் கல்லூரிக்கு உள்வாங்கும் செயன்முறையில் புதிதாக இணைத்துக் கொள்வது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவிஸாவளை மற்றும் ஹோமாகயை அண்டிய பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் முகமாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள்இ 25 வருடங்களுக்கு மேல் பெருந்தோட்ட துறையில் தொழில் புரிந்திருக்க வேண்டும் என்ற விடயத்தில் அதனை ஆகக் குறைந்தது 10 வருடங்களாக மாற்ற முடியுமா என்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்படுகிறது.

ஒருசிலர் பெருந்தோட்டங்களில் தொழில் புரியாவிட்டாலும் அவர்கள் பெருந்தோட்ட பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

எனவேஇ அவர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ  கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் இரண்டு எஸ் சித்திகள் பெறவேண்டும் என்பதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுஇ ஆகக் குறைந்தது 3 எஸ் சித்திகள் தகைமை அவசியம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது எதிர்காலத்தில் கல்விமாணிப் பட்டம் வழங்கும் நோக்குத்துடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

 

Leave a comment