மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 05 சாரதிகள் கைது!

209 0
கிளிநொச்சி பல்லவராஜன் கட்டுச் சந்திப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் போலியான மணல் வழியனுமதிப் பத்திரத்தை தயாரித்து நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 04, டிப்பர் வாகனங்களையும் மற்றும்  அனுமதிப் பத்திரம் இன்றி ஆற்று மணலை கடத்திச் சென்ற ஒரு டிப்பர் வாகனத்தையும் கைப் பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில்
அதன் சாரதிகள் 05, பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒப்படைக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாச்சிக்குடா பொலிஸ் நிலையத்தில் குறித்த சான்றுப் பொருட்களும் சந்தேக நபர்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
கிளிநொச்சி/முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் திற்கு நீண்ட காலமாக சட்ட விரோதமான முறையில் போலியான  வழி அனுமதிப் பத்திரம் தயாரித்து ஆற்று  மணல் கடத்தப் படுவதாக   கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, கிளிநொச்சி/முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான
பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின் விசேட  உத்தரவுக்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்னம் ஜெசிந்தன் தலைமையில்  தலமையிலானபொலிஸ்
அணியினர் நேற்று  இரவு 08, மணியளவில் மன்னருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே உள்ள பல்லவராஜன் கட்டுச் சந்திப் பகுதியில் விசேட வீதிக் கண் காணிப்பு பணியில்  ஈடுபட்டு இருந்த வேளையிலேயே குறித்த டிப்பர் வண்டிகள் கைது செய்யப்பட்டன.
இதில்  சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட  போலியான  வழியனுமதிப் பத்திரத்துடன் ஆற்று மணலை ஏற்றி பயனித்த 04, டிப்பர் வாகனங்களையும் அனுமதிப் பத்திரம் இன்றி ஆற்று மணலை ஏற்றி பயனித்த 01, டிப்பர் வாகனத்தையும் கைப் பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் அதன் சாரதிகள் 05, பேரையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப்பொருட்கள் கைதான சந்தேக நபர்களை
நாச்சிக்குடா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணை களுக்காக ஒப்படைக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி/முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment