யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு சற்று முன் பிணை

264 0

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்டில் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டது. குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரது விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சம்­பவ இடத்தில் இருந்து துப்­பாக்கி ரவைகளின் வெற்­றுதோட்டாக்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியில் வைக்­கப்­பட்டனர்.

அவர்கள் கடந்த 11 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment