வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் தொடர்பில் கணிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

439 0

வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பில் உடன் கணிப்பீடுகளைச் செய்து சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாகாண உள்ளூராட்சி அமைச்சர் மற்றும்  பிரதம செயலாளர் ஆகியோருக்கு வர்த்தகமானி அறிவித்தலுடன் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் இடம்பெற்ற   புதிய சபைகளின் உருவாக்கம் மற்றும் சபைகளின் தரம் உயர்வு தொடர்பான கோரிக்கைகளின் அடிப்படையிலான ஆய்வுகளிற்கே தற்போது இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் வட மாகாணத்தில் பிரதேச சபைகளே இல்லாத பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு புதிய சபைகளை உருவாக்குவதன் அடிப்படையில் வடக்கில் மருதங்கேணி, கண்டாவளை , ஒட்டுசுட்டான் , மடு போன்ற பிரதேசங்களும் தற்போதுள்ள சபைகளை தரமுயர்த்துவதன் அடிப்படையில் வலி. தெற்கு , கரவெட்டி , கரைத்துரைப்பற்று , வவனியா , மன்னார் உள்ளிட்ட பல  சபைகள ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆய்விற்கு உட்படுத்தும்போது கருத்தில் கொள்ளுமாறு 18 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அக் குழுக்களில் உள்ளூராட்சி ஆணையாளர் , அமைச்சின் செயலாளர் , உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு குறித்த ஆய்விற்கு உட்படுத்தி அதிலிடப்படும் புள்ளியிடலின் அடிப்படையில்பெறுபேறுகளை அனுப்பி வைக்குமாறு மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் கோரப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட சில தகுதி வாய்ந்த அதிகாரிகளில் ஒருவர் தலைவராக இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a comment