லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சார்பில் மேன்முறையீடு

325 0

கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அரச அதிகாரிகள் இருவர் சார்பில் மேன்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைதொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சார்பில் அவர்களின் சட்டதரணிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, 60 கோடி ரூபா பெறுமதியான பௌத்த சில் அனுஷ்டான ஆடைகளை சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியே அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறை தண்டனைக்கு எதிராகவே மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment