வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பினார்.

249 0

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று நாடு திரும்புகிறார்.

அவர் கடந்த 8ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையுடனான உறவினை தொடர்ந்தும் இந்தியா பேண ஆவலுடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

அத்துடன், ராஜதந்திர இரு தரப்பு உறவினை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்தியா அதிகம் கவனம் செலுத்துவதாகவும் மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிப்பிடத்தக்கது.

Leave a comment