இலங்கையின் சீரற்ற காலநிலை 14வரை நீடிக்கும் 

9876 43

நிலவும் மழையுடனான காலநிலை நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சம்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் மேலும் மழை வீச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்றைய தினத்தை விட இன்று மழை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழையினால் மூடப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சம்பரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய இதனை தெரிவித்தார்.

இரத்தினபுரி, குருவிடை, எஹெலியகொடை, அயகம மற்றும் எலபாத ஆகிய பகுதிகளுக்கான பாடசாலைகளே நாளை திறக்கப்படவுள்ளது.

Leave a comment