வைத்திய சபையின் சில கடமைகள் புதிய ஆணைக்குழு வசம்?

6887 0

தனியார் வைத்தியக் கல்வி ஒழுங்குமுறை தொடர்பான, இலங்கை வைத்திய சபையின் செயற்பாடுகளை ஆணைக்குழுவொன்றுக்கு வழங்க தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆணைக்குழு தனியார் பல்கலைக்கழக நிலைமைகளை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒன்றாக செயற்படும் வகையிலான வரைபுகள் அரசினால் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

சயிட்டம் பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு மற்றும் இலங்கை வைத்திய சபையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போதும் இந்த ஆணைக்குழு தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a comment