ஜப்பான் வீரர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை

239 0

ஜப்பான் வீரர் ஒருவர் முதன்முறையாக 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

டோயோ பல்கலைக்கழக மாணவரான 21 வயதான யோஷிஹை என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று ஜப்பானில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவர் 100 மீட்டர் தூரத்தை 9.98 வினாடிகளில் கடந்துள்ளார்.

இதற்கமைய, ஜப்பான் வீரர் ஒருவர் 10 வினாடிக்குள் இலக்கை எட்டியது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் கோஜி இடோ என்பவர் கடந்த 1998ஆம் ஆண்டு 10 வினாடிகளில் ஓட்ட தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது.

எவ்வாறாயினும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment