சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கை தொடர்பில் இருவர் கைது 

336 0

சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் சஹா காவற்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் படி, 15 பேர், சட்டவிரோதமாக இலங்கை மற்றும் எகிப்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகத்துக்குரியவர்களில் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி சஹா சர்வதேச வானுர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மற்றவர்,முன்னர் சிறுநீரக சட்டவிரோத மாற்று நடவடிக்கைகளில் ஈடு;பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதரபாத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார்.

விசாரணைகள் மூலம் சந்தேகத்துக்குரிய இருவரும் இலங்கை மற்றும் எகிப்தில் உள்ள முகவர்கள் ஊடாக சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளனனர்.

அவர்கள் பல லட்சம் ரூபாய்களுக்கு சிறுநீரகம் தேவையுடையோருக்கு அதனை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் சிறுநீரக கொடையாளிகளுக்கு சிறுதொகை பணமே வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக சஹா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment