ஏர்மா சூறாவளி….

973 0

ஏர்மா சூறாவளி தற்போது கரிபியன் தீவுகளான ஹெய்ட்டி, டர்க்ஸ் மற்றும் காய்கோஸ் ஆகியவற்றை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நில அதிர்வில் ஹெய்ட்டி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் அதில் இருந்து மீளவில்லை.

இந்த நிலையில் ஏர்மா சூறாவளிஅந்த தீவில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்பாக சூறாவளியின் காரணமாக இந்த தீவுகளில் 20 அடி உயரத்துக்கு கடல் அலைகளை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி தமற்போது மணிக்கு 290 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்கிறது.

ஏறகனவே சென் மார்டின், பார்புடா போன்ற தீவுகள் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதுவரையில் 10 பேர் இந்த சூறாவளியால் மரணித்துள்ளனர்.

நாளையதினம் இந்த சூறாவளி ஃப்ளோரிடாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment