இவ்வருடத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்!-ராஜித

374 0

நிலவும் அதிக மழை காரணமாக டெங்கு நோய் தொற்று மீண்டும் பரவக்கூடும் என்பதால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுக்கு இன்று அறிவித்தார்.

தற்போதைய நிலையில் , நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டளவில் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவி்த்திருந்தார்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த காலத்தில் வாரமொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் , தற்போதைய நிலையில் அது ஆயிரத்து 500 வரை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.

Leave a comment