உடல் நலக்குறைவு-விபத்தில் பலியான 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி

505 0

201607050939016571_Tamil-Nadu-across-ADMK-Womens-Team-meeting-Jayalalithaa_SECVPFபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-சென்னை பெருநகர காவல் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த பழனி;
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்த முத்துலட்சுமி;

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பெர்னாண்டஸ்;

திருச்சிராப்பள்ளி மாநகரம், பாலக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜான்சன்;கோயம்புத்தூர் மாநகரம், பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த பாண்டியன்;உறையூர் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜசேகர்;

திருச்சிராப்பள்ளி மாநகரம், கே.கே.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சீத்தாராமன்;சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த திருமுருகன்;அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த அமலதாஸ்;

திருநெல்வேலி மாவட்டம், சேந்தமரம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்த யூசுப் அலி;தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த செந்தில்;

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, மோட்டார் வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த விஜயகுமார்;தேனி மாவட்ட ஆயுதப் படை, வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த அம்பேத்கார்;விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த பாலமுருகன்; ஆகியோர் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.

சென்னை பெருநகர காவல், பாதுகாப்பு, சென்னை காவல் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பஷீர்;தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்த செந்தில்குமார்;

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த முருகேசன்;சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்த அர்ஜூன்ராஜ்;

விருதுநகர் மாவட்ட ஆயுதப் படை பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த துரைராஜ்; ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.திருத்தணி வட்டம், என்.என்.கண்டிகையைச் சேர்ந்த சிவக்குமார்;மதுராந்தகம் வட்டம், சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்;

போளூர் வட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நிவேத்; ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.