பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியில் சிறீலங்கா

357 0

656103716-sri-lanka-cricket-logo_6பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியிலேயே சிறீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும், தமிழர் பிரச்சனைகளிலும் அரசாங்கம் போலியான வாக்குறுதிகளை அளித்து வருகின்றது.

தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டனர். இதனால் தமிழ்மக்கள் தமிழ் தலைமைமீது வைத்திருந்த நம்பிக்கையும் இழக்கப்பட்டுவிட்டது.

முன்னாள் அரசாங்கம் தனக்கு எதிரானவர்களை பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைந்தது. இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு எனக் கூறி, அதே பயங்கரவாதச் சட்டத்தை வேறுபெயரில் நடைமுறைப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.