தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை-  உப்புல் தேசப்ரிய

476 15

கொரிய குடாவில் நிலவும் இயல்பற்ற சூழ்நிலைகள் காரணமாக தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகத்தின் ஊடக பேச்சாளர் உப்புல் தேசப்ரிய இதனை தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமைகள் ஏற்படின் அங்கு தொழில்புரியும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment