இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம்

905 0

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜார்ஜ் (வயது 4), சார்லோட் (2) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவருடைய மனைவி கேதே மிடில்டன், 3-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இத் தகவலை அரண்மனை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. ராணி எலிசபெத்தும், இருதரப்பு குடும்ப உறுப்பினர்களும் இச்செய்தியால் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிறக்கப் போகும் 3-வது குழந்தை, இங்கிலாந்து அரியணையில் ஏறும் வாரிசுகளில் 5-வது இடத்தைப் பிடிக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a comment