ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – தயாராகின்றது மகிந்த அணி 

556 0

அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர மகிந்த அணி முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் இன்றையதினம் கூடவுள்ள மகிந்த அணியின் கட்சித் தலைவர்களது கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மகிந்த அணியின் பிரதி இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment