யாழ்.காரைநகர் பகுதியில் பாடசாலை மாணவி காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம் நிலவிவருகின்றது.
குறிப்பாக மாணவியின் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் அயலவர்களிடம்; இருந்து மாணவியை இறுதியாக கண்ட சந்தர்ப்பம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காரைநகர் திக்கரையைச் சேர்ந்த சன்முகராஜா துவாரகா என்னும் 16 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு காணாமல் போயிருந்தார்.
சிறுமியை தேடி அலைந்த பெற்றோர் மறுநாள் (நேற்று) தமது விட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த பெற்றோர் தெரிவிக்கையில், வழமை போன்று அவள் வீட்டிற்குள் இருந்து படித்துக் கொண்டிருந்தாள். இரவு 8 மணியளவில் சாப்பிடுவதற்கான அவளை அழைத்த போது அவள் வீட்டிற்குள் இல்லை.
எல்லா இடங்களிலும் தேடினோலம், உறவினர் வீடுகளிலும் தேடினோம் அவள் இல்லை. காதல் பிரச்சினை காரணமாக அவளுக்கு தாய் ஏசியிருந்தாள். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியில் போய்விட்டாள் என்று நினைத்தோம். ஆனால் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வாள் என்று நினைக்கவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கைளில் குறித்த சிறுமி யோரே சிலருடன் வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவர்களின் பேச்சுவார்த்தை சண்டைபோல் இருந்தது. இருட்டுக்குள் நடந்ததால் அதனை நாங்கள் சரியாக பார்க்க முடியவில்லை.
குறித்த வீதியால் கடற்படையினர் அடிக்கடி சென்று வருகின்றவர்கள் அவர்களும் இங்குள்ள பெண் பிள்ளைகளுடன் சேட்டை விடுகின்றவர்கள் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்கின்றார்கள்.
வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைத் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025