பதுளையில் 28000 குடும்பங்களுக்கு பாதிப்பு!

260 0

உமா ஓய திட்டத்தின் பாதிப்பு காரணமாக பதுளை மாவட்டத்தில் 28 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 28 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக இதுவரை கணிப்பிடப்பட்டுள்ளது. 

மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி இந்த தகவலை வௌியிட்டுள்ளார்,

பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கு அளவையியல் திணைக்களத்தின் ஊடாக இதுவரை 300 மில்லியன் ரூபாக நிதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிப்புக்கு உள்ளான வீடுகள் மற்றும் அவதானம் நிறைந்த பிரதேசங்களில் உள்ள மக்களை மீள குடியமர்த்துவதற்கு திக்கராவ மற்றும் கிரேக்வத்த பகுதிகளில் காணிகள் கையக்கப்படுத்தப்பட்டன.

இருந்தபோதும் அந்த பிரதேசங்களும் உமா ஓய திட்டம் காரணமாக எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகலாம் என தேசிய கட்டிட ஆய்வுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி, அந்த நடவடிக்கையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நிமல் அபேசிறி தெரிவித்தார்.

இதுவரை பாதிப்புக்கு உள்ளான 1861 வீடுகளுக்காக அரசாங்கம் 26 கோடிக்கும் அதிகமான நிதி பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment