சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க, அனுரபண்டாரநாயக்க போன்றோர் கட்சியை கைவிட்டபோது தாமே கட்சியை பாதுகாத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹக்மன பிரதேச கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கான நிறைவாண்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் தாமதமாகவே கிடைத்ததாக மகிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
அவ்வாறான நிலையில் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

