2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிய உறுப்பினர்களும் உறுதிகொள்ள வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவாண்டு நிகழ்வில் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கு அதன் அங்கத்தவர்கள் தமது உயிரையும் தியாகம் செய்து உழைத்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியில் தலைவர்களை விட உறுப்பினர்களே முக்கியமானவர்கள்.
அனைவரும் இணைந்து 2020இல் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு உறுதிகொள்ள வேண்டும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

