நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு இடமளிக்கக் கூடாதென காடினல் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.பலாங்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் விழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.
இலங்கைக்கு பொருளாதார சாதகத் தன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அதனூடாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொண்டுவருகின்றது.
உணவு உடை போன்ற காரணிகளுக்காக ஆன்மாவை விலைகொடுக்க முடியாது.
போராடிப் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திம் வரை முன்னேற்றப்பட வேண்டும் என மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

