பண்டாரவளை – திக்அராவையில் நிலவெடிப்பு

223 0

பண்டாரவளையில் நேற்று பெய்த 6 மில்லிமீற்றர் மழையில் திக்அராவ, கிணிகம, வலஸ்பெத்த, அப்புஹாமி வீதியில் சில வீடுகளில் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மனிதவுரிமைகள் கேந்திர நிலையம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், குறித்த பிரதேசங்களில் உள்ள குழுக்களுக்கு கிடைத்த தகவலின் படி 48 சம்பவங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட வீடுகளில் வெயில் தாக்கம் ஏற்பட்ட பின்னர் அவற்றின் பிளவுகள் அதிகரித்துள்ளன.

தரையோடுகள் மற்றும் சீமெந்து பூச்சுக்களில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

பதுளை மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி சிவப்பு வரைபடத்திற்கு உட்பட்ட 150 வீடுகளில் இருந்து பொதுமக்கள் அகற்றப்பட்டுள்ளனர்.

எனினும் வாடகை செலுத்த முடியாத உள்ளதால் சில குடும்பங்கள் குறித்த வெடிப்புக்கு உள்ளான வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

Leave a comment