இலங்கை இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு ஒரு போதும் தயார் இல்லை – அமைச்சர் மகிந்த சமரசிங்க

338 0

இலங்கை இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு ஒரு போதும் தயார் இல்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் தளபதியான ஜகத் ஜயசூரிய தொடர்பில் நேற்றைய தினம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் குறித்து ஊடக வியலாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற போது பொது மக்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் ஒரு போதும் செயற்படவில்லை.

எனினும் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் முக்கிய விடயங்கள் ஏதேனும் இருக்கின்றதா? என்பது தொடர்பில் சரியான தெளிவு இல்லை என மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரித்தானிய இராணுவம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் பொறுப்பேற்பதாக அண்மையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்திருந்த நிலையில்,

இலங்கையின் இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் முன்னிற்கும் என பிரதி அமைச்சர் சுஜீவ சேன சிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சரத் பொன்சேகா பழிவாங்கும் எண்ணத்துடனான அரசியல் பிரவாகத்திலேயே பயணிப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்தினருக்காக உயிரையும் கொடுத்து அவர்களை பாதுகாப்பதற்கு முன்னிற்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a comment