ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது நிறைவாண்டு இன்றாகும்.

13255 156

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் பிரதமர் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மகாஜன எக்சத் பொதுஜன பெரமுன என்ற கூட்டமைப்பில் களம் இறங்கி ஆட்சியை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷவினால் வழிநடத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையாற்றுகின்றார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது நிறைவாண்டு நிகழ்வு நாளைய தினம் பொரலை கெம்பள்பிட்டி மைதானத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

 

Leave a comment