ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்கா

433 0

ரஷ்யாவில் அமெரிக்க தூதரகங்களில் கடமையாற்றி வந்த பணியாளர்களை பதவிநீக்கம் செய்ததற்கு பதலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இயங்கி வரும் 3 ரஷ்ய தூதரங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையில் பணிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க 35 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியிருந்தது.

இதற்கு பதலடியாக ரஷ்யாவில் தங்கியிருந்த 30 அமெரிக்க தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வந்த ரஷ்ய தூதரகம் மற்றும் வாஷிங்கடன், நிவ்யோர்க் நகரில் உள்ள தூதரகங்களை ரஷ்ய அரசு மூடவேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a comment