அதிமுக பொதுக்குழுவை கூட்டுபவர்கள் மீது சட்டநடவடிக்கை – டிடிவி தினகரன்

535 15

அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மற்றும் அதில் கலந்துக்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதற்காக எதிர்வரும் 12ம் திகதி அதிகமுக பொதுக்குழு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட உள்ளது.

இதேவேளை இது குறித்து அறிக்கை ஒன்றை தினகரன் வெளியிட்டுள்ளார்.

அதில் கட்சியின் விதிமுறைகளின்படி பொதுக்குழுவையும் செயற்குழுவையும் பொதுச்செயலாளர் சசிகலா மட்டுமே கூட்ட முடியும்.

மேலும் பொதுக்குழு  தொடர்பான அறிவிப்புக்கும் கட்சிக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment