அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தை இந்தியா உறுதிப்படுத்த வேண்டுமென – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

271 0

சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதை  இந்தியா உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமெனவும், அதனை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு வரைவு இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,  மக்கள் கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்

இலங்கை அரசாங்கமானது இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இதனை நிறைவேற்றுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மீள உறுதிசெய்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், அந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவர தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்குமெனவும் கூறியுள்ளார்.

Leave a comment