மாலபே தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமித்தார் ஜனாதிபதி

342 0

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து 10 நாட்களுக்குள் அறிக்கையொன்றை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டீ.சீ. திஸாநாயக்க மற்றும் பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment