இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகிறார் கென்னத் ஜஸ்டெர்

375 0

இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்ய இருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக இருப்பதால் அப்பதவிக்கு கென்னத் ஜஸ்டெரின் பெயரை அந்நாட்டு அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்ய இருக்கிறார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கென்னத் ஜஸ்டெர், கடந்த ஜூன் மாதம் வரை டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராகவும் பதவி வகித்தார்.

அதற்கு முன்னதாக கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டுவரை, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் வணிக செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Leave a comment