மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு தாம் இரகசியமாக அனுப்பி வைத்த கடிதம் ஒன்று தொடர்பில் இலங்கை மருத்து சபையின் முன்னாள் தலைவர் காலோ பென்சேகா இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
சிறை வைக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவ செயற்பாட்டாளர்களின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிபிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு தாம் மருத்துவ சபையின் தலைவராக பொறுப்பேற்று 2வருடங்கள் ஆனதன் பின்னர் சைட்டம் பல்கலைக்கழகத்தின் தரம் குறித்த சந்தேகம் தமக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனவே அது குறித்து அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஸவுக்கு இரகசிய கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த செயற்பாடுகளை அப்போதைய உயர்கல்வி அமைச்சரான எஸ் பி திஸாநாயக்க கண்கானித்து வந்தார்.
எனினும் தற்போது குறித்த பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளதாகவும் மருத்து சபையின் முன்னாள் தலைவர் காலோ பென்சேகா குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் குறிப்பிட்ட சிலரின் பக்கம் சார்ந்து சைட்டம் தொடர்பான பிரச்சனையை அணுகுமானால் இந்த அரசாங்கம் கவிழ்க்ப்ட வேண்டியது ஒன்றாகும்.
தமது வாழ்வின் இறுதிக்கட்டத்தை இதற்காக அர்ப்பணிக்க உள்ளதாகவும் காலோ பொன்சேகா குறிப்பிட்டார்.

