ஹாவி சூறாவளியை அடுத்து தென்கிழக்கு டெக்சாஸில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நிலவுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரையில் 44 பேர் பலியாகினர்.
மேலும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்னும் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாம்பு, முதலை போன்ற உயிரிழனங்களாலும் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

