உலக கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு இனி இலங்கை கையில் இல்லை

1547 14

இலங்கை கிரிக்கட் அணி, 2019ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை தமது ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெறும் இலங்கை – இந்திய கிரிக்கட் தொடரில் 2 போட்டிகளில் குறைந்தபட்சம் வெற்றிப் பெற்றிருந்தால், 2019 உலக கிண்ணத் தொடருக்கு இலங்கை நேரடியாக தகுதிபெற்றிருக்கும்.

ஆனால் நேற்றைய போட்டியில் தோல்வி கண்டநிலையில், இனி மேற்கிந்திய தீவுகள் அணி முகம் கொடுக்கவுள்ள 6 ஒருநாள் போட்டிகளிலும் சந்திக்கும் தோல்வியிலேயே இலங்கை அணிக்கான வாய்ப்பு தங்கியுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் இலங்கையில் வெற்றி பெற்றாலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆறு ஒருநாள் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றிப் பெற்றால் இலங்கை அணி தமது வாய்ப்பை இழக்கும்.

இலங்கை அணி ஐந்தாம் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்றால், மேற்கிந்திய தீவுகள் ஐந்து போட்டிகளில் வெற்றிப் பெறுவதே, 2019ம் ஆண்டு உலக கிண்ண தொடரில் மேற்கிந்தியா நேரடியாக தகுதி பெறுவதற்கு போதுமானதாக அமையும்.

Leave a comment