ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66 வருட பூர்த்தியில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிரணியை அங்கத்துவப்படுத்தும் சகல ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இரண்டாவது முறையாகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
தமக்கு இன்னும் அழைப்பிதழ்கள் கிடைக்க பெறவில்லை என கூட்டு எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இதன்காரணமாகவே இரண்டாவது தடவையாகவும் நேற்றைய தினம் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பபட்டதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66 வது வருட பூர்த்தி நாளை மறுதினம் கொழும்பு கெம்பல் திடலில் இடம்பெறவுள்ளது.

