பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
பொலித்தீன் பை, உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிஃபோம் உணவுப் பெட்டி என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
குறித்த தடையினை மீறி செயற்படுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றத்தால் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
எனினும், இந்தத் தடைக்கு பொலித்தீன் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

