எல்பிடிய தீ – இடைக்கால அறிக்கை கோரல்

222 0

எல்பிடிய – குருந்துகஹாஹெதெக்ம உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் தொடர்பாகவும் திணைக்களத்திற்கு சொந்தமான ஆவணங்கள் தீயினால் அழிவடைந்தமை தொடர்பாகவும் இடைக்கால அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அஞ்சல் திணைக்களம் இந்த அறிக்கையை கோரியுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் விசேட அதிகாரிகள் சிலர் குறித்த இடத்திற்கு சென்று இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்தின எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அஞ்சல் திணைக்களத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக குறித்த உபஅஞ்சல் நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் அதிகாலை குறித்த உப அஞ்சல் நிலையத்தின் பொறுப்பதிகாரி தீயில் கருகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

49 வயதான அவர் 2 பிள்ளைகளின் தயார் ஆவார்.

அவர் அஞ்சல் நிலையத்திற்கு அருகாமையில் இரண்டு அதிஸ்ட இலாப விற்பனை நிலையங்களையும் பத்திரிகை விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்துள்ளார்.

குறித்த பெண் தீக்கிரையாவதற்கு முன்னர் விசம் அருந்தி இருந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பொருட்டு பலியான குறித்த அஞ்சல் நிலைய பொறுப்பதிகாரியின் உடற்பாகங்கள் சில இரசாயன பகுப்பாய்வுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a comment