கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களை முன்னிலைப்படுத்தி, இன்று இரவு சயிட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச் சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதில், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

