வடகொரியா, அண்டை நாடுகளையும் ஐ.நா சபையையும் விரும்பவில்லை – ட்ரம்ப்

259 0

வடகொரியா இறுதியாக மேற்கொண்ட ஏவுகணைச் சோதனையானது, அதன் அண்டைய நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் வடகொரியா விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வடகொரியா மேலும் தனிப்பட்டுச் செல்வதை அதிகரித்துக் கொண்டுள்ளது.

அத்துடன் வடகொரியா தொடர்பான அனைத்து வகையான தெரிவுகளும் மேசையில் உள்ளன.

இந்த விடயத்தில் அமெரிக்க உரிய தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் தரைப்பகுதிக்கு மேலாக செல்லும் வகையில் வடகொரியா ஏவுகணை ஒன்றை செலுத்தி இருந்தது.

இது தொடர்பில் உடனடியாக பாதுகாப்பு சபைக் கூட்டப்பட வேண்டும் என்று ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே வலியுறுத்தி இருந்தார்.

தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதாலேயே தாங்கள் இந்த ஏவுகணையைச் செலுத்தியதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர கூட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a comment