சர்வதேச காணாமல் போனோர் தினமும் ஈழத்து உறவுகளும்!

11665 0

சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் பல்லாயிரக்கணக்காணோர் காணமல் போயுள்ளனர். அதாவது பலர் கட்டாயமாக காணாமல் செய்யப்படுகிறார்கள். குறித்த நபர்களை விரும்பாத ஒரு அரசியல் பிரமுகரோ அல்லது ஒரு இராணுவ தலைமையோ அவரை தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவலுக்காக ,வருகைக்காக காத்திருக்கும் உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தீவில் நடைபெற்ற இன விடுதலைப்போராட்டத்தின் போது பல்லாயிரக் காணக்காணோர் காணால் போனார்கள். குறிப்பாக இறுதி யுத்தம் எனப்படும் முள்ளிவாய்கால் முடிவின் போது ஆயிரக்காணக்காணோர் காணாமல் போயுள்ளனர்.

இராணுவத்தினரிடம் தமது பிள்ளைகளை, கணவன்மாரை ஒப்படைத்தவர்கள் எங்கே அவர்கள் என அரசாங்கத்திடம் கேட்ட போது அவர்கள் நாளுக்கொரு காரணம் சொல்லி நழுவி விடுகிறார்கள்.

காணாமல் போனார் அலுவலகம் என கண்துடைப்பு செய்கிறார்கள்.விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலன் (சசிதரன்) உட்பட சிலரின் உறவினர்கள்ஆட்கொணர்வு மனு மூலம் அப்போதைய முல்லைத்தீவு இராணுவத்தளபதி மீது வழக்கு பதிவு செய்த போதிலும் கூட அதற்கு இராணுவம் ஒத்துளைக்கவில்லை.

காணமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சி,முல்லைத்தீவு , வவுனியா, யாழ்ப்பாண என 150 நாட்களுக்கு மேல் கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இப் போராட்டத்தை தமக்கான ஒரு அரசியல் பிரச்சரா இடமாக அவ்வப்போது பயன்படுத்தி செல்கின்றது.

காணமல் போனோரின் உறவினர்களிடம் இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதிகள் காணல் நீரானது. கண்துடைப்பாக இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார் அதில் உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகிறோம். படையினரிடம் தங்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கடத்தப்பட்டவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியவர வேண்டும்.

அது அவர்களது உரிமை. இந்த அடிப்படை உரிமையைக் கவனத்திற் கொள்ளாமல் விடமுடியாது. மேலும், குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதோடு, இந்த நாட்டில் எதிர்காலத்திலும் இத்தகைய பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யுமாறும் கோருகிறோம்.

இந்தநாட்டில், பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு மாறாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளைச் செயற்படுத்தப்படுவதனையும் உறுதி செய்யுமாறும் நாம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். என்றுள்ளது. இது இதயசுத்தியோட மக்கள் மீதான அக்கறையுடன் வெளியிடப்பட்டதல்ல . காலம் காலமாக சம்பந்தனின் அரசியல் நாடகத்தின் ஸ்கிரிட்.

Leave a comment