கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இரண்டு பிரதேச செயலாளா்களுக்கும் தொலைநகல் மூலம் (28) பிற்பகல் இடமாற்றம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளா் கோ.நாகேஸ்வரன், மற்றும் கண்டாவளை பிரதேச செயலளா் த.முகுந்தன் ஆகியோருக்கே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன் கண்டாவளைக்கும், கண்டாவளை பிரதேச செயலாளா் த.முகுந்தன் கரைச்சிக்கும் இடமாற்றப்பட்டுள்ளனா்.
ஆறு வருடங்களாக கோ. நாகேஸ்வரன் கரைச்சி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளாா்.அவ்வாறே த. முகுந்தனும் நீண்டகாலமாக கண்டாவளையில் பணியாற்றியிருக்கின்றார்.

