இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் – அடுல் கெசாப்

557 0

dqwdw8b3e24a7fc57fa1_XLஇலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்க அதிகாரிகள் வருவது, அமெரிக்காவின் முழுமை ஆதரவை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இதனை தெரிவித்தார்.
இதன்படி, இலங்கையின் சர்வதேச உறவுகள், பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்திக்கான உதவி, இராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்பது இதன் மூலம் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல வருட இடர்களுக்கு பின்னர், இலங்கையின் ஜனநாயக கட்டியெழுப்பலுக்கும் சமாதான சுபீட்சத்துக்கும் அமெரிக்காவின் ஆதரவளிக்கும் என்று அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே இந்த வெளிப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் விமானப்படை Operation Pacific Angel என்ற பணிக்குழுவின் வருகை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த செயலகம் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை புனரமைத்தல், சமூகத்துக்கு மருத்துவ சேவையை வழங்குதல் என்பவற்றை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது அமரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கி பிணைப்பை ஏற்படுத்தும் என்றும் கெசாப் குறிப்பிட்டார்.