அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் முகுருஜா, பிளிஸ்கோவா வெற்றி

284 0

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை லெப்செங்கோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 3 நிமிடம் தேவைப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் மிசா எகுஷியை (ஜப்பான்) விரட்டியடுத்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற பிளிஸ்கோவாவுக்கு 57 நிமிடமே தேவைப்பட்டது.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் மார்டின்கோவாவை எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை எகதிரினா அலெக்சாண்ட்ரோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் அன்னா ஜாசாவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 7-5, 7-5 என்ற நேர்செட்டில் செர்பியாவின் ஜெலினா ஜாங்கோவிச்சை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் அரினா ரோடினோவா (ஆஸ்திரேலியா), மக்டலினா ரைபரிகோவா (சுலோவக்கியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் கேமருன் நோரி(இங்கிலாந்து)-டிமித்ரி டுர்சுனோவ் (ரஷியா) இடையிலான ஆட்டத்தில் 7-6 (9-7), 6-1 என்ற கணக்கில் கேமருன் நோரி முன்னிலையில் இருந்த போது டிமித்ரி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் கேமருன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave a comment