ஆளுங்கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைணை கொண்டுவர கூட்டுஎதிரணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் இருவருக்கு எதிராகவே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர்கள் இருவரும் தத்தமது அமைச்சுகளில் மேற்கொண்டுள்ள நிதி மோசடிக்கு எதிராகவே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும்,கூட்டுஎதிரணி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைபாடு செய்துள்ள ‘டொப் டென்’ பட்டியலில் இவர்களின் பெயர் காணப்படுவதாகவும் கூட்டுஎதிரணி குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இதனை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாகவும் கூட்டுஎதிரணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

