தமிழரசுக்கட்சியில் மாற்றங்கள்

378 0

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

கட்சியின் உயர்மட்டம் இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது
உள்ளுர், பிராந்தியம் மற்றும் சர்வதேச செயன்முறைகளுக்கு ஏற்ப கட்சியின் செயற்பாட்டை மாற்றியமைக்கவேண்டிய நிலையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய செய்திசேவை ஒன்று கூறுகிறது

வரப்போகும் வடமாகாணசபை தேர்தலை சந்திக்கும் வகையில் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன

இதன்படி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக செயற்படும் அதேநேரம் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன

வடமாகாணசபையை தமிழரசுக்கட்சி கைப்பற்றியபோதும் அங்கு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன

எனினும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு விடயங்களில் அந்த மாகாணசபை தோல்விக்கண்டுள்ளதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர்

இதில் இருந்து மீளும் முகமாகவே தமிழரசுக்கட்சியின் செப்பனிடல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன

Leave a comment