ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும். இல்லையெனின் அதற்கு எதிராக அடுத்த மாத முற்பகுதியில் நிதியமைச்சை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுப்போம் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருதானை சனசமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அச்சங்கத்தின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

