மைத்திரியுடன் இரகசியப் பேச்சு – மறுக்கிறார் மஹிந்த!

306 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் இரகசியமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பற்றி கூட்டு எதிர்க்கட்சியினர் அண்மையில், மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மைத்திரி தரப்புடன் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டு என்பதனால் மீளவும் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது எனவும், மைத்திரியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment