யானைத் தாக்குதல்கள் அதிகரிப்பு

306 0
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் அபிவிருத்திகளுக்கு மத்தியில் இடம்பெறும் காடழிப்பு காரணமாக யானைகள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் அதிகளவில் சஞ்சரிக்கின்றன.

இதையடுத்து பல்வேறு நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாக கடந்த 23 ஆம் திகதி வீரகெட்டிய பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகள் வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த யானைகள் சூரிய வெவ பிரதேசத்தில் இருந்து சில தினங்களாக ஹத்போருவ, துனகம ஊடாக வீரகெட்டியவுக்கு பயணித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் குறித்த யானைகள் இரண்டும் வலஸ்முல்ல கந்தேபெத்த பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன.

இவ்வாறான நிலைமைகள் காரணமாக பொதுமக்களது மாத்திரமன்றி காட்டு யானைகளின் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment