அரியானா கலவரத்தில் 30 பேர் பலி – டெல்லியில் 144 தடை உத்தரவு 

300 0
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை  வெடித்துள்ளது.
அரியானா – பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கலவரக்காரர்கள் டெல்லியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment